அனர்த்தத்திற்குப் பிறகு அரசாங்கம் மேற்கொண்டு வரும் மீட்பு வேலைத்திட்டத்திற்கு மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்கள் பாராட்டு

11 Dec, 2025 | 03:51 PM
image

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் வரலாற்று சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண, முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும்  வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோர் இன்று வியாழக்கிழமை (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையினால்  ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47