கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

11 Dec, 2025 | 02:38 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வருவாய்க்கு ஏற்ற வகையில் தான் கடனை வாங்கி, அதனை முழுமையாக திருப்பி செலுத்தி வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக நெருக்கடிகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு உடனடியாக அதிக வட்டிக்கு கடன் வாங்கி கடன் சுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த கடன் சுமையை அவர்களால் சுமக்க முடிவதில்லை. இந்நிலையில் இத்தகைய எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றால் எம்முடைய நாளாந்த வருவாய் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் சீராக வந்து கொண்டிருக்க வேண்டும். அதே தருணத்தில் கடனை அடைக்க வேண்டும் என்றால் தொழிலில் கூடுதலான வருவாய் கிடைக்க வேண்டும்.

இதற்கு தொழில் எந்த வகையிலும் தடைபடாமல் சீராகவும்  சிறப்பாகவும் இயங்கிடவேண்டும். இதற்கு உங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஐந்து நெய் தீபங்களை ஏற்றி, சக்கரத்தாழ்வாரை 21 முறை வலம் வந்து 'கடன் சுமையிலிருந்து விடுபட தொழில் மேம்பட வேண்டும்.

அதற்கு உங்களது அருள் வேண்டும்' என பிரார்த்திக்க வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து அதனூடாக கடனை திருப்பி செலுத்தி கடன் சுமை குறைவதை அனுபவபூர்வமாக உணரலாம்.

சிலருக்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் இது போன்ற பிரார்த்தனையை மேற்கொள்ள இயலாத நிலையோ அல்லது அதில் ஏதேனும் நடைமுறை சார்ந்த அசௌகரியங்கள் ஏற்பட்டால் பெருமாள் ஆலயத்தில் தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை வழிபடலாம்.

இவருக்கு ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி, 11 முறை வலம் வந்து உங்களது பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமும் உங்களுடைய தொழில் அபிவிருத்தி அடைந்து கூடுதல் லாபம் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48