சிறந்த குணச்சித்திர நடிப்பிற்காக தேசிய விருதினை வென்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கிராண்ட்ஃபாதர் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிராண்ட்ஃபாதர்' எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், பிராங்ஸ்டர் ராகுல், சுனில், ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த் , ஸ்ரீநாத் , சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, மைம் கோபி, ஹரிஷ் பெராடி, 'மெட்ராஸ்' ரமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சந்தானம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரெஞ்சின்ராஜ் இசையமைக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார்.
ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக் குழுவினர் நிறைவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM