30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகளை நன்கொடையாக வழங்கியது ஐ.நா அபிவிருத்தித்திட்டம்

Published By: Vishnu

10 Dec, 2025 | 11:42 PM
image

(நா.தனுஜா)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்கும், பாதுகாப்பான தூய குடிநீரின் கிடைப்பனவை உறுதிசெய்வதற்கும் உதவும் வகையில் 30 க்கும் மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றன்ர.

அதற்கமைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்கும், பாதுகாப்பான தூய குடிநீரின் கிடைப்பனவை உறுதிசெய்வதற்கும் உதவும் வகையில் 30 க்கும் மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டாவினால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த உதவி நீரின் மூலம் பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், தூய குடிநீரின் கிடைப்பனவு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் என்பவற்றை உறுதிசெய்வதற்கும் பங்களிப்புச்செய்யும் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீண்டெழும் தன்மையையும், தயார்நிலையையும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி நாட்டின் தேசிய கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அத்திட்டம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த விரைவில் புதிய...

2026-08-15 18:42:19