(நா.தனுஜா)
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவசியமான உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 2.4 மில்லியன் யூரோ நிதியை விடுவித்துள்ளது.
அதில் 1.8 மில்லியன் யூரோ நிதி இலங்கையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் பேரவையின் உடனடி அனர்த்த உதவி நிதியத்தின் ஊடாக உதவிகளை வழங்குவதற்கென அளிக்கப்பட்டிருக்கும் 500,000 யூரோ நிதியும் இதனுள் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM