திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதல் ; இளைஞர் உயிரிழப்பு

Published By: Vishnu

10 Dec, 2025 | 11:27 PM
image

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனவராய இராணுவ முகாமிற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் ஏற்பட்ட லொறி–மோட்டார் சைக்கிள் விபத்தில் தீவிர காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான 29 வயதான இளைஞர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முயன்றபோதிலும், காயங்களின் தீவிரத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இராணுவப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட லொறியை இயக்கிய இராணுவ கோப்ரல் ஒருவர், விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலும் விசாரணைகளை சீனவராய பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17