இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட  நேரம் தாருங்கள் - வடக்கு ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு கடிதம்

Published By: Vishnu

10 Dec, 2025 | 09:18 PM
image

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும் ஜனாதிபதி  மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (10) சந்தித்து இக்கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன எவ்வகையில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தால் கையளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதனை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06