கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை விதைக்கும் - செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவை

10 Dec, 2025 | 07:10 PM
image

(நா.தனுஜா)

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தாம் தொடர்ந்து உடன்நிற்கப்போவதாகவும், இவ்வாறான நெருக்கடிநிலையின்போது கருணை மிகுந்த ஒவ்வொரு செயலும் பாதிக்கப்பட்டோர் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் எனவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவையின் ஆசிய, பசுபிக் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

'தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அந்தவகையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஏனைய மனிதாபிமானப் பங்காளிகள் ஊடாக உடனடி நிவாரண உதவிகள் சென்றடையும் வகையில் முதற்கட்டமாக 890,000 டொலர் நிதியுதவியை வழங்கிய பிரித்தானியா, அதனைத்தொடர்ந்து மேலும் 430,000 டொலர் நிதியை வழங்கியது.

அந்த நிதியுதவியின் ஊடாக செஞ்சிலுவை சங்கம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் நிலையில், நேற்று முன்தினம் (9) கம்பஹா மாவட்ட மக்களுக்கான நிவாரண உதவி வழங்கல் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை சங்கத்துடன் இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் தெரெஸா மஹோனியும் இணைந்துகொண்டார்.

அத்தோடு செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா கிளையின் ஊடாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் பியகமவில் நடாத்தப்பட்டுவரும் மருத்துவ முகாமையும் பதில் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தாம் தொடர்ந்து உடன்நிற்கப்போவதாகவும், இவ்வாறான நெருக்கடிநிலையின்போது கருணை மிகுந்த ஒவ்வொரு செயலும் பாதிக்கப்பட்டோர் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் எனவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவையின் ஆசிய, பசுபிக் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39