உடலுக்கு குளுமையை தரக்கூடியதும், செரிமானத்தை தூண்டும் தன்மை உடையதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியதும், விஷக்கடிக்கு மருந்தாக அமைவதும், ஊட்டச்சத்து மிக்கதுமான கரும்பின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தும் முக்கிய பொருளாக கரும்பு விளங்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கரும்பு சாறை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கரும்பு சாறு, எலுமிச்சை, இஞ்சி.
ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும். பொங்கலின்போது சாப்பிடும் உணவுகள் செரிக்கவும், வயிற்று நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவுகிறது. இந்த சமயத்தில் கரும்பு அதிகளவில் கிடைக்கும் என்பதால் அதை நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம். 50 மில்லி கரும்பு சாறுடன், ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், உடல் எரிச்சல் அடங்கி குளுமை பெறும். கை, கால் எரிச்சல் சரியாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட கரும்பின் வேரை பயன்படுத்தி நீர் சுருக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கரும்பில் இருந்து எடுக்கக் கூடிய காடியை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கரும்பு காடி என்பது கரும்புச் சாறை புளிக்க வைத்து தயாரிப்பார்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கரும்பு காடியை பூச்சிக்கடி, தேள்கடி உள்ள இடத்தில் தடவினால் விஷம் முறியும். வலியும் வீக்கமும் குறையும். கரும்பின் வேர் பகுதி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் என்பதால், நமக்கு கரும்பு கிடைக்கும்போது அதன் வேர்களை சேகரித்து காயவைத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM