நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படாததால் தொழிலாளர்கள் பாதிப்பு

10 Dec, 2025 | 04:23 PM
image

நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர், கிரகரி வாவியில் நீர் நிரம்பி வழிந்து சென்றதால், வாவியில் படகு சவாரி முற்றாக  நிறுத்தப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகு சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, அவ்விடம் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு அதிகமான படகுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. சில படகுகள் முழுமையாக சேதமடைந்து ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது படகுகள் நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க கயிறு மூலம் கரையோரத்தில்  உள்ள மரங்களில் பாதுகாப்பாக படகுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த படகு சவாரி தொழிலாளர்கள் கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இன்று புதன்கிழமை (10) வரை மழை, வெள்ளம் மற்றும் காற்று காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படகு சவாரி தொழிலாளர்கள் இது தொடர்பாக கூறுகையில், 

நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் பகுதிகளில் வாவி நீரில் கழிவு நீர், பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமான கலந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்யும் பகுதிகளில் தற்போது தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் தேக்கியிருக்கும் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு புதிய சுத்தமான நீரை சேமிக்கவேண்டும். 

மேலும், படகுகள் நிறுத்தி வைத்துள்ள இடங்களும் கரையோரங்களும் நடைபாதையும் அதிகமாக சேதமடைந்துள்ளன. இவற்றை நுவரெலியா மாநகர சபை உடனடியாக தலையிட்டு சீரமைத்து, பின் விரைவில் படகு சவாரி  பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம் போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என பொறுப்பான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47