விஜய் அண்டனியுடன் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்தவர் நடிகை சுஷ்மா ராஜ். இப்படத்தின் தோல்வியால் தமிழில் பெரிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. இருந்தாலும் திரிஷா நடித்த நாயகி, மற்றும் ஜிந்தா ஆகிய படங்களில் நடித்தார் சுஷ்மா ராஜ். தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்திய இவர், வாய்ப்பிற்காக கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்று அறிவித்தார். அத்துடன் நிற்காமல் ஜில்லென்று கவர்ச்சியாக தோன்றும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தைப் பார்த்த பிறகு இரண்டு தெலுங்கு படங்களில் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சந்தோஷத்துடன் தெரிவிக்கிறர் சுஷ்மா ராஜ்.

விஜய் அண்டனி தற்போது நடித்து வரும் படத்தில் ஒரேயொரு பாடலுக்கும் ஆடவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தகவல் : சென்னை அலுவலகம்