தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்திய மதிப்பில் நான்காயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இது தொடர்பாக தமிழக அரசுடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கை சாத்திட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் - தமிழக செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் - தென்னிந்திய திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான நட்சத்திரங்களான விஜய் சேதுபதி -நாகார்ஜுனா -மோகன்லால் -ஆகியோர் பங்கு பற்றினர்.
தற்போதுள்ள சூழலில் பட மாளிகை ரசிகர்களுக்கு இணையாக டிஜிட்டல் தளத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை மற்றும் தரமான படைப்புகளை கருத்தில் கொண்டும், திரைத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் 'சவுத் அன்பவுன்ட் 'எனும் திட்டத்தை முன்னெடுத்தது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை அண்மையில் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தையை நடத்தினர்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கு பற்றிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் இத்தகைய திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கூட்டாண்மை மூலம் ஆயிரம் நேரடி வேலை வாய்ப்புகளும் ,15,000 மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். திரை துறையுடன் இணைந்த வலுவான பொருளாதரத்தை கட்டமைப்பதில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது'' என்றார்.
இந்நிகழ்வில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி திரு சுசாந்த் ஸ்ரீராம், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தென் பிராந்திய தலைவர் திரு.கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
இந்த கூட்டான்மை மூலம் தென்னிந்திய படைப்பாளிகளை சர்வதேச அரங்கத்திற்கு அழைத்துச் செல்லும் புதிய முயற்சி என கருதப்படுகிறது.
மேலும் இந்நிகழ்வில் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாக உள்ள தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'காட்டான் ' - மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி நடிக்கும் 'பார்மா' ஆகிய படைப்புகளின் பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டன.
':மோகன்லால் -நாகார்ஜுனா- தனுஷ் -சிவகார்த்திகேயன் -நயன்தாரா- சமந்தா- உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மறு வரையறை செய்யும் ':என ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் தென்னிந்திய படைப்பாளிகள் உருவாக்கும் படைப்புகளுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்திய மதிப்பில் நான்காயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதால்.. தென்னிந்திய துறையில் உள்ள படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் சர்வதேச அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM