அர்ஜுன் தாஸ் உடன் இணையும் மலையாள நடிகை அன்னா பென்

10 Dec, 2025 | 03:26 PM
image

தமிழ் திரையுலகின் வசீகரம் கலந்த காந்த குரலுக்கு சொந்தமான நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.

'கொட்டு காளி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான மலையாள நடிகை அன்னா பென் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாலும்... முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு இந்த கூட்டணியில் இணைந்து இருப்பதாலும்...இப் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு திரையுலக வணிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்