இன்றைய சூழலில் எம்முடைய பிள்ளைகள் வார இறுதி நாட்களில் சாகசங்கள் நிறைந்த அதிலும் குறிப்பாக நீர் நிலையில் விளையாடப்படும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள்.
இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறார்கள் அங்கு சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
இத்தகைய சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது அங்குள்ள நீர் மூக்கின் வழியாக செல்வதை தடுக்க இயலாது. பெரும்பாலும் நீரானது சுத்திகரிக்கப்பட்டு இருந்தாலும் சில தருணங்களில் அவை மூக்கின் வழியாக பயணிக்கும் போது, நீரில் இருக்கும் கிருமிகள் உடலுக்குள் சென்று விடக்கூடும். இதன் காரணமாக அவர்களுக்கு மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கடல், நதி, ஏரி, குளம் போன்ற இயற்கையான நீர் நிலைகளில் சாகசம் மேற்கொள்ளும் போதோ அல்லது நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போதோ அந்த தண்ணீரில் வாழும் அமீபா எனும் வைரஸ் கிருமி மூக்கின் வழியாக உள்ளே சென்று மூளை பகுதியை அடைந்து அங்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய கிருமி மூக்கின் வழியாக மூளையை சென்றடைந்ததும்.. அங்கு இரண்டு வாரங்கள் வரை தங்கி இருந்து அதன் பிறகு ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்க தொடங்குகிறது.
இதன் அறிகுறியாக காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியவை வெளிப்படுத்தும். இந்த அமீபா மணல், குட்டை, மலை சார்ந்த பகுதி, ஏரி, நீச்சல் குளம் என பல இடங்களில் உயிர் வாழும்.
இந்த நீரை குளோரின் எனும் ரசாயனத்தை தெளித்தால் அவை இறந்துவிடும். இந்த குளோரின் எனும் ரசாயனத்தை நீரில் சமச்சீரான அளவில் பராமரிக்கப்படவில்லை என்றால்.. அங்கு அமீபா எனும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நுண்ணுயிரி உயிர் வாழும்.
இவை வாய் வழியாக சென்றால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் மூக்கின் வழியாக செல்லும்போது இவை மூளை பகுதிக்குள் எளிதாகச் செல்லும்.
பொதுவாக இதுபோன்ற ஆரோக்கியமற்ற நீரின் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மூன்று நாள் முதல் இரண்டு வாரங்களுக்குள் காய்ச்சல், மயக்கம், இருமல், வாந்தி ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும்.
சிலருக்கு குழப்ப நிலை ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக கோமா நிலைக்கு சென்று விடுவார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, முழுமையான நிவாரண சிகிச்சையை அளித்திட வேண்டும்.
வைத்தியர் :வேணி தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM