எம்முடைய ஜாதகத்தில் திசா புத்தி நன்றாக இருந்தும். கிரகங்கள் முழுமையான சுப பலன்கள் வழங்க கடமைப்பட்டிருந்தாலும்..பல காரியங்களில் தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இவை கிரகத்தால் ஏற்பட்ட தடைகள் அல்ல... எம்முடைய கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் ஏவப்படும் தடையாகும்.
இத்தகைய தருணத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதற்கும், எதிரிகள் யாரென்று தெரிந்து கொள்வதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
எதிரிகளை கண்டறிவதற்கும் அவர்கள் எம்முடைய பாதையில் இருந்து அகற்றுவதற்கும் பெரும்பாலும் செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் முருகப்பெருமானை கந்தர் சஷ்டி கவசம் பாடி வழிபடுமாறு முன்னோர்கள் அறிவுறுத்துவார்கள்.
இது உரிய பலனை வழங்கும் என்றாலும் சிலருக்கு எதிரிகளின் தொல்லை தாங்க இயலாத துயரத்தை ஏற்படுத்தும் போது, அவர்களை அப்புறப்படுத்த எம்முடைய வீடுகளுக்கு அருகே உள்ள முத்தாரம்மன் எனும் அம்மனின் சன்னதிக்கு சென்று, அம்மனுக்கு ரோஜா பூ மாலை சாற்றி, இரண்டு நெய் விளக்குகளை ஏற்றி, எதிரிகளின் பெயரை உச்சரித்து அல்லது மறைமுக எதிரிகளிடமிருந்து அச்சமின்றி செயல்படுவதற்கு அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்து அர்ச்சனை செய்திட வேண்டும்.
இதனை ஒரு முறை மேற்கொண்டாலே... எதிரியஞ தொல்லை இல்லாததை நீங்கள் உணர்வீர். ஏனெனில் முத்தாரம்மனின் சூட்சம ஆற்றல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM