மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் கூட்டணி

10 Dec, 2025 | 03:10 PM
image

தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.  பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ்  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்