பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரெயன் ஜயலத்தை  எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாலிகாகந்த நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ரெயன் ஜயலத் உட்பட ஐவரை கைது செய்யுமாறு கடந்த 10 ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந் நிலையிலேயே ரெயன் ஜயலத் தனது சட்டத்தரணிகளுடன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.