நடிகர் ரக்சன் நடிக்கும் 'மொய் விருந்து' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

10 Dec, 2025 | 02:59 PM
image

சின்னத்திரை நட்சத்திரமும், 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ரக்சன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'மொய் விருந்து' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எம் .சசிகுமார் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சி. ஆர். மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மொய் விருந்து' எனும் திரைப்படத்தில் ரக்சன் ,ஆயிஷா , அர்ச்சனா, அபர்னதி, தீபா சங்கர் , சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நமோ நாராயணன், கஜ ராஜ், தங்கதுரை, மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம் . சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கமலக்கண்ணன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழகத்தின் டெல்டா பிராந்தியத்தில் உள்ள பேராவூரணி எனும் ஊரில் மொய் விருந்து எனும் நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு தாங்களே மொய் விருந்து எனும் நிகழ்வு மூலம் நிதி உதவியை பெற்றுக் கொள்வது ஆச்சரியத்தை அளித்தது. இதனை பின்னணியாக கொண்டு ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தில் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29
news-image

லெனின் பாண்டியன்' சமூகத்திற்கு தேவையான வலிமையான...

2026-09-14 15:17:57
news-image

தீபாவளி வெளியீட்டில் இடம்பெறும் நயன்தாராவின் 'மூக்குத்தி...

2026-09-14 15:17:42
news-image

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2”...

2026-09-13 10:01:50
news-image

செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியீட்டை...

2026-09-12 15:42:25
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-09-12 15:41:43
news-image

நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா'...

2026-09-12 15:39:15
news-image

நடிகர் ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப்...

2026-09-12 15:36:15