தேசிய அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்காக மக்கள் வங்கி, UnionPay International ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

10 Dec, 2025 | 05:47 PM
image

இலங்கையின் மிகப் பாரிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய அரச வங்கிகளுள் ஒன்றான மக்கள் வங்கி, டிஜிட்டல் நிதியியல் புத்தாக்கம் மற்றும் நவீன, பணப் பாவனையற்ற சமுதாயத்தை நோக்கி தேசத்தை முன்னேற்றுவதற்கான ஆதரவு ஆகியவற்றில் தொடர்ந்தும் முன்னின்று உழைத்து வருகின்றது.

இந்த அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலகில் மிகப் பாரிய அட்டை வழங்குனரும், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற உலகளாவிய கொடுப்பனவு வலையமைப்புக்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற தேசிய அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்காக மக்கள் வங்கி, UnionPay International  (UPI) ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து உடன் மிக முக்கியமான மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளமை குறித்து மக்கள் வங்கி அறிவித்துள்ளது.  

சீனா Union Pay  தலைவர் தடோங் ஜுன்ஃபெங் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

வலிமைமிக்க மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, டிஜிட்டல் வழிமுறைகளை கைக்கொள்வதை விரைவுபடுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இந்த ஒத்துழைப்பு மிக நெருக்கமாக ஒன்றியுள்ளது.  

இந்த கூட்டாண்மையின் கீழ், மக்கள் வங்கி LankaPay–UnionPay  இணை நாமம் கொண்ட தேசிய அட்டை உள்ளிட்ட ருnழைnPயல அட்டைகளை மக்கள் வங்கி விநியோகிக்கவுள்ளதுடன், அதன் மூலமாக பாதுகாப்பான, வசதியான, மற்றும் சிக்கனமான கொடுப்பனவுத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் முதல் பாரிய வர்த்தக நிறுவனங்கள் வரை, அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கி, மக்கள் வங்கியின் விசாலமான வணிகர் வலையமைப்பின் மத்தியில் ருnழைn Pயல அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரிவுபடுத்தி, பணப் பாவனையின்றிய, வலிமைமிக்க கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறுவதை மேலும் வலுப்படுத்தும் முயற்சியையும் இந்த உடன்படிக்கை உள்ளடக்கியுள்ளது.   

மிகவும் விசாலமான கிளை வலையமைப்பு மற்றும் மிகப் பாரிய வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றின் அனுகூலத்துடன், இலங்கையில் பிரத்தியேகமான புத்தாக்கமான, செலவு குறைந்த டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்கி, நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் வங்கி மற்றும் ருnழைnPயல ஐவெநசயெவழையெட ஆகியன ஒன்றிணைந்து செயற்படவுள்ளன. 

மக்கள் வங்கி தொடர்பான விபரங்கள்

1961ம் ஆண்டு மக்கள் வங்கி சட்ட இலக்கம் 29ன் கீழ் நிறுவப்பட்ட மக்கள் வங்கி, இலங்கையின் இரண்டாவது மிகப் பாரிய நிதி நிறுவனமாக, ரூபா 3.3 ட்ரில்லியனுக்கும் மேற்பட்ட மொத்த சொத்துக்களுடன், 747 கிளைகள் மூலமாக, 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றது. 307 சுய வங்கிச்சேவை மையங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி அதிகரித்த அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் தீர்வுகள் ஆகியவற்றுடன் டிஜிட்டல் ரீதியாக இவ்வங்கி தனது பிரசன்னத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது. 

UnionPay International (UPI) தொடர்பான விபரங்கள்

 UnionPay ன் உலகளாவிய வணிகத்தை விரிவுபடுத்தி, ஆதரவளிப்பதில் ருnழைnPயல  UnionPay International (UPI)  கவனம் செலுத்தியுள்ளது. உலகளாவில் 2,600 க்கும் மேற்பட்ட கூட்டாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற UPI ஆனது 183 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அட்டை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இடமளித்துள்ளதுடன், 84 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் அட்டை விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றது.

மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற UnionPay அட்டைதாரர்கள் மற்றும் வணிகர்களுக்கு வசதியான மற்றும் நம்பத்தகுந்த கொடுப்பனவு அனுபவங்களை உறுதிப்படுத்தி, உலகின் மிகப் பாரிய அட்டைதாரர் தளத்திற்கு உயர் தரம் கொண்ட, சிக்கனமான, மற்றும் நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பான கொடுப்பனவு சேவைகளை  UPI வழங்கி வருகின்றது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய...

2026-01-12 13:59:19
news-image

நிர்க்கதிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு...

2026-01-08 19:04:29
news-image

HelaGo அறிமுகம்: இலங்கையில் புதிய நியாயமான...

2026-01-07 15:57:51
news-image

2024 - 25க்கான Business Today’s...

2026-01-06 19:06:17
news-image

2025 "CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...

2026-01-06 15:34:16
news-image

இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன்...

2026-01-06 15:23:21
news-image

HelaGo அறிமுகம் : இலங்கையில் புதிய...

2026-01-05 18:47:55
news-image

வட மாகாணத்தின் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு...

2026-01-05 16:47:51
news-image

இலங்கையின் முதல் ATM வணிகம், தொழில்நுட்ப...

2026-01-02 15:34:14
news-image

தேசிய லொட்டர் சபையால் 1,265 மில்லியன்...

2026-01-01 15:54:35
news-image

கார்கில்ஸ் வங்கி தெஹிவளை கடற்கரையை சுத்தம்...

2026-01-01 15:51:49
news-image

எல்ஜீ அபான்ஸ் குறியீடு தூதுவரானார் பெத்தும்...

2026-01-01 14:33:04