சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது! 

10 Dec, 2025 | 02:01 PM
image

சீனாவில் இலஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் ஒருவருக்கு நேற்று (9) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018க்கு இடையில் பல திட்டங்களை செயற்படுத்தவும் அதற்கு நிதி அளிப்பதற்கும் அவர் பெருமளவில் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அவர் 156 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் வாங்கிய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கடந்த மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. 

இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03
news-image

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்

2026-07-20 17:26:16
news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23