பங்களாதேஷின் உயர் செயற்திறன் பிரிவின் தலைமை பயிற்றுவிப்பாளராக சம்பக நியமனம்

Published By: Digital Desk 7

18 Aug, 2017 | 01:24 PM
image

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான சம்பக ராமநாயக்க பங்களாதேஷ் கிரிக்ககெட் அணியின் உயர் செயற்திறன் பிரிவின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் உள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறிந்து, அவர்களை தேசிய அணியில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தை சம்பக ராமநாயக்க மேற்கொள்ளவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

சம்பக, இதற்கு முன்னர்  கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையான கலப்பகுதியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாராக பணியாற்றியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பிரிவின் பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் சம்பக ராமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

“பங்களாதேஷ் வீரர்களுக்கு ஏற்கனவே பயிற்சியளித்துள்ளேன். தற்போது இளம் வீரர்களை தேடும் பயணத்தில் இணைந்துள்ளேன். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள திறமையான வீரர்களை கண்டுபிடித்து, கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்துவதே எனது இலக்கு. பங்களாதேஷின் இளம் வீரர்களிடம் இயற்கையாகவே திறமை இருக்கிறது. அதனை கண்டுபிடித்து திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.

“நான் இலங்கை தேசிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ஆரம்ப காலங்களில் வீரர்களின் வளர்சியில் முக்கிய கவனம் செலுத்தினேன். அவர்களோடு நாள் தோறும் பணிபுரியும் போது அவர்களோடு நெருங்கிப் பழகி வீரர்களின் உள ரீதியான அபிவிருத்தியையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவியது. 

பயிற்சிகள் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் ஆனால் முன்னர் பார்த்திராத திறமை மிக்க இளைஞர்களை நான் சந்திப்பேன் என எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக இந்த பெரிய நாட்டில் இயற்கையாகவே திறமை மிக்க வீரர்கள் இருப்பார்கள் அவர்களை கண்டு பிடிக்கவே எதிர்பார்த்திருக்கிறேன்.

பங்களாதேஷ் தேசிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கொட்னி வோல்ஸுக்குப் பிறகு இரண்டாவது உயர் பதவியில் நியமிக்கப்பட்டவர் சம்பக ராமநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59