அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகள், ஐ.நா. நிறுவனங்கள், சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் பரோபகாரர்களிடமிருந்து பெறப்படும் பொருட்கள் முறையாகவும் சரியான நேரத்திலும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் இக்குழு இயங்குவதுடன் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தில் (NDRSC) நிறுவப்பட்ட விசேட செயலகம் மூலம் செயற்படும்.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்கள் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம அலுவலர் மட்டம் உள்ளிட்ட நிர்வாக மட்டங்களில் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன, ஒதுக்கப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொறுப்பான தேசிய ஒருங்கிணைப்பு மையமாக இது செயற்படும்.
NDRSCஆல் பராமரிக்கப்படும் ஒருங்கிணைந்த தேசிய தேவைகள் தரவுத்தளத்துடன், கிடைக்கப் பெரும் வெளிநாட்டு உதவிகள் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்வதே குழுவின் முதன்மைப் பங்காகும்.

கிராம அலுவலர் (GN), பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தரவுத்தளம், எங்கு, எப்படி பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையை தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
அத்துடன் இந்தக் குழு, தாமதங்களைக் குறைத்து, இடைவெளிகளை நிவர்த்தி செய்து, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.

செயற்பாட்டு ரீதியாக, வெளிநாட்டு உதவிப் பொருட்களை பொறுப்பேற்றல், ஆவணப்படுத்தல், தரக்கட்டுப்பாடு, களஞ்சியப்படுத்தல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் போக்குவரத்து நடைமுறைகளை இக்குழு மேற்பார்வை செய்யும்.
மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் GN பிரிவுகளுக்கு திறம்பட அனுப்பப்படுவதை உறுதிசெய்ய, இறுதிக் கட்ட போக்குவரத்து நடவடிக்கைகளையும் இது மேற்பார்வையிடும்.
மேலும் கண்காணிப்பு மற்றும் அனைத்து அறிக்கையிடல் வழிமுறைகளும் இதன் மூலம் பராமரிக்கப்படும்.
வெளிநாட்டு உதவிகள் கண்காணிப்பு அமைப்பை (Foreign Aid Tracking System) நிர்வகிப்பது இக்குழுவின் முக்கிய பொறுப்பாகும். இது பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும்.

இதற்கு அனைத்து தொடர்புடைய அமைச்சுகள், மாகாண நிர்வாக அலகுகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் அறிக்கைகளை வழங்க வேண்டப்படுவதுடன், சமீபத்திய சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய தரவுகளை இவ்வமைப்பில் ஊட்டவேண்டும்.
தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, தேவையான தகவல்களைப் பெறவும், அதிகாரிகளை அழைக்கவும், அறிக்கைகளைக் கோரவும், நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும், அவசர காலங்களின்போது இடைக்கால உத்தரவுகளை வழங்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து, கொள்முதல் அல்லது துறை சார்ந்த விநியோகத்தை வலுப்படுத்த சிறப்பு இக்குழுவிற்கு உருவாக்கலாம். அதன் முடிவுகள் வெளிநாட்டு நிவாரண நடவடிக்கைகள் தொடர்புடைய தேசிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்.
நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் காலகட்டம் முழுவதிலும் இக்குழு செயலில் இருக்கும்.
மேலும் அந்நடவடிக்கைகள் முறையாக முடிவடையும் வரை அனைத்து வெளிநாட்டு உதவி தொடர்பான அமைப்புகளையும் தொடர்ந்து மேற்பார்வை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM