கார்த்தி நடிப்பில் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'வா வாத்தியார்' எனும் திரைப்படம் - மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்ட திரைப்படம் என அப்படத்தின் இயக்குநரான நலன் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் நலன் குமாரசுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ' வா வாத்தியார் ' எனும் திரைப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ் , ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சிவக்குமார்- இயக்குநர் ஆர். ரவிக்குமார் - தயாரிப்பாளர் சக்திவேலன் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சூது கவ்வும் என்ற படத்தை இயக்கிய பிறகு ஒரு தசாப்தம் கடந்து தர்மம் வெல்லும் என்பதனை மையப்படுத்தி 'வா வாத்தியார் 'எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இதுபோன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பு வழங்கிய மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு நன்றி. அவருக்கு அர்ப்பணிப்பு செய்யும் வகையில் தான் இந்த படம் உருவாகி இருக்கிறது''என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், '' சினிமாவில் எத்தனை முறை ஜெயித்தாலும் நாம் தோற்றதை பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதனால் துணிந்து இந்த படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றும் போது தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவருடைய ஆளுமையைப் பற்றி உணர்ந்து கொண்டேன். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப் படம் வெற்றி பெறும்'' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM