டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் குரு லக்ஷ்மன் மற்றும் நடிகை பாடினி குமார் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹார்டிலே பற்றரி ' எனும் அசல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் சதாசிவம் செந்தில் ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹார்டிலே பற்றரி' எனும் இணையத் தொடரில் குரு லக்ஷ்மன், பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்ஸி, கலை, சீனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு மைக்கேல் ஆகாஷ் இசையமைத்திருக்கிறார். அறிவியல் புனைவுடன் தயாராகி இருக்கும் காதல் படைப்பான இந்த இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடரின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இணைய தொடர் குறித்து இயக்குநர் சதாசிவம் செந்தில் ராஜன் பேசுகையில், '' தர்க்கத்திற்கும், உணர்விற்கும் இடையிலான எல்லைகளை தொட்டுப்பார்க்கும் வகையில் இந்த இணைய தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சோபியா எனும் விஞ்ஞான ஆர்வலர் - காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலந்த கலவைதான் என நம்புகிறாள். இதற்காக பிரத்யேக கருவி ஒன்றினை உருவாக்கவும் திட்டமிடுகிறாள்.
இந்தத் தருணத்தில் சித் எனும் கேலிச்சித்திர கதையை எழுதும் எழுத்தாளரை சந்திக்கிறார். அவர் மனிதர்களின் உணர்வுகளை அறிவியல் கருவிகளால் அளவிட இயலாது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். இந்த நேர் எதிர் துருவங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போது ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள் தான் இந்த இணையத் தொடரின் பிரதான அம்சம் '' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM