(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கட்டாக், பரபதி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
ஹார்திக் பாண்டியாவின் அதிரடி அரைச் சதம், அக்சார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா,வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்காற்றின.
இப் போட்டியில் டிவோல்ட் ப்ரவிஸின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஜஸ்ப்ரிட் பும்ரா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 100ஆவது விக்கெட்டைப் பூர்த்திசெய்தார்.
இதன் மூலம் மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷக்கிப் அல் ஹசன், லசித் மாலிங்க, டிம் சௌதீ, ஷஹீன் ஷா அப்றிடி ஆகியோரைத் தொடர்ந்து ஐந்தாவது வீரராக ஜஸ்ப்ரிட் பும்ரா இணைந்துகொண்டுள்ளார்.
மேலும், தென் ஆபிரிக்காவை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு இந்தியா ஆட்டம் இழக்கச் செய்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஷுப்மான் கில் (4), சூரியகுமார் யாதவ் (12) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (17 - 2 விக்.)
மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தபோது அபிஷேக் ஷர்மா 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து திலக் வர்மா 26 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
14 ஓவர்கள் நிறைவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.
அப்போது ஹார்திக் பாண்டியா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய பாண்டியா 28 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இதனிடையே ஷிவம் டுபே 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (137 - 6 விக்.)
ஹார்திக் பாண்டியாவும் ஜிட்டேஷ் ஷர்மாவும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 175 ஓட்டங்களாக உயர்த்தினர். அதுவே இந்திய இன்னிங்ஸில் பதிவான சிறந்த இணைப்பாட்டம் ஆகும்.
பந்துவீச்சில் லுங்கி நிகிடி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லூதோ சிப்பம்லா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
176 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 12.3 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியைத் தழுவியது.
இது தென் ஆபிரிக்காவின் மிகக் குறைந்த ரி20 எண்ணிக்கையாகும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக ராஜ்கொட்டில் தென் ஆபிரிக்கா பெற்ற 84 ஓட்டங்களே ரி20 போட்டிகளில் அதன் முந்தைய மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது.
இன்றைய போட்டியில் குவின்டன் டி கொக் முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் வெளியேறியது தென் ஆபிரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
அணித் தலைவர் எய்டன் மார்க்ராம் (14), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (14), டிவோல்ட் ப்ரவிஸ் (22) ஆகியோர் தமது அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால் அது பலன் தரவில்லை.
எட்டாவது ஓவரில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு கௌரவமான நிலையில் இருந்தது.
ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் மிகத் துல்லியமாக பந்துவீசி கடைசி 6 விக்கெட்களை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழச் செய்து தமது அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர்.
மத்திய வரிசையில் மார்க்கோ ஜென்சன் (12) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவம் டுபே ஒரு ஓட்டத்திற்கு ஒரு விக்கெட்டையும் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன்: ஹார்திக் பாண்டியா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM