குழந்தைகளுக்கு ஏற்படும் பிராங்கியோலைட்டஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

09 Dec, 2025 | 06:55 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளம் தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை பராமரித்து பேணி வருவதில் அதீத அக்கறை செலுத்தி வருகிறார்கள். பிறந்த குழந்தையை தொடர்ந்து அவதானிப்பது அவர்களுடைய முதன்மையான கடமையாகும். இந்நிலையில் குழந்தைக்கு திடீரென்று சளி, இருமல் ,காய்ச்சல் ஏற்பட்டால் பதறி அடித்து அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவார்கள்.

பிள்ளைகளுக்கு மூக்கிலிருந்து சளி ஒழுகினாலும்.. இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்தாலும்.. அத்தகைய பிள்ளைகள் பிராங்கியோலைட்டஸ் எனப்படும் வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும். குழந்தைகளின் தோலில் நிறமாற்றம், உதட்டிலும், கை விரல்களின் நகங்களிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது சுவாசத்திற்காக சிரமப்பட்டாலோ திரவ உணவுகளை எடுத்துக் கொள்வதில் புறக்கணிப்பை மேற்கொண்டாலோ உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கச் சென்று குழந்தைகள் நல நிபுணரை அணுக வேண்டும்.

இது ஒரு வகையினதான வைரஸ் தொற்று காரணமாக உருவாகும் பாதிப்பு ஆகும். குறிப்பாக குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தைகளின் இதயம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியம் பொறுத்தும்... சில பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்தாலும் இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும்.

இது போன்ற தருணங்களில் குழந்தைகளுக்கு எக்ஸ் ரே பரிசோதனை சளி பரிசோதனை, குருதி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். பெரும்பாலும் ஒன்று முதல் இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் நீங்கி, பிள்ளைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். இதுபோன்ற தருணங்களில் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியம் சார்ந்த நடைமுறையை பெற்றோர்கள் உறுதியுடன் கடைப்பிடித்தால்.. பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியர் தனசேகர் தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31