முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

09 Dec, 2025 | 06:49 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய மண்ணில் முருக பெருமானை வணங்கும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களும் முருகப்பெருமானை வணங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் முருகனின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கும்? என்பதில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கிருத்திகை, உத்திரம், விசாகம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருக பக்தர்களாக இருந்து முருகனை வழிபட வழிபட வழிபட வாழ்க்கையில் முன்னேற்றமும் , வளர்ச்சியும் அதிகரிக்கும்.

சஷ்டி மற்றும் திரிதியை திதியில் பிறந்தவர்களும் முருகனை வழிபட்டால் முன்னேற்றம் உண்டு

பத்திரை காரணத்தில் பிறந்தவர்கள் முருகனை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

உங்களுடைய குடும்பத்தில் அப்பப்பா.. தீவிர முருக பக்தர்களாக இருந்து மறைந்தால்.. அவர்களுடைய பேரன் அல்லது பேத்தி கிருத்திகை, உத்திரம், விசாகம்  ஆகிய நட்சத்திரத்தில் அல்லது சஷ்டி திதி- திரிதியை திதி அல்லது பத்தரை கரணத்தில் பிறப்பார்கள்.

முருக வழிபாட்டிற்குரிய பிரத்யேக கிழமை செவ்வாய்க்கிழமையாகும்.

செவ்வாய் திசை அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து செவ்வாய் திசை நடந்தாலும் அல்லது வேறு ஏதேனும் கிரகத்தின் திசை நடந்தாலும் முருகப்பெருமானை வழிபடலாம்.

செவ்வாய் பகவான் ஆண் கிரக வீட்டில் இருந்தால் முருகனை வழிபடலாம்.‌

இவர்கள் அனைவரும் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம் அல்லது நல்லூர் முருகனை வழிபடலாம்.

வீட்டில் வேல் மாறல் - கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - பாடலாம். சஷ்டி விரதமும் மேற்கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமையும் சஷ்டி திதியும் வரும் நாளிலோ அல்லது செவ்வாய்க்கிழமையும் பத்தரை கரணமும் இணைந்து வரும் நாளிலோ அருகில் இருக்கும் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று முருகனை வணங்கினால் சுப பலன் கூடுதலாக கிடைக்கும்.

உடனே எம்மில் பலர் இவர்கள் மட்டும்தான் முருகப்பெருமானை வணங்க வேண்டுமா? வேறு நட்சத்திரம்- திதி -கரணத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை வணங்க கூடாதா? என தர்க்கம் எழுப்பவர். இவர்கள் முருகப் பெருமானை வணங்கினால் உச்சபட்ச பலனை விரைவாக பெறுவார்கள். மற்றவர்கள் இவர்களை உடன் அழைத்துச் சென்று முருகனை வணங்கினால் எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன் கிடைக்கும் என்பதுதான் இதில் உள்ள சூட்சமம்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்காத காணியை விற்பனை செய்வதற்கான சூட்சும...

2026-01-12 15:53:56
news-image

குலதெய்வத்தின் அருளை எளிதாக பெறுவது எப்படி...?

2026-01-10 17:59:12
news-image

தன வரவு தொடர்ந்து அதிகரிக்க....!!?

2026-01-09 17:38:45
news-image

சூரிய பகவானின் அருள் கிடைப்பதற்கான சூட்சம...

2026-01-08 15:21:13
news-image

விரக்தி நிலையில் இருந்து விடுபடுவதற்கான பிரத்யேக...

2026-01-07 16:41:49
news-image

சித்தர்கள் ‘உயிர்’ன்னு சொன்னதை நாம ‘மூச்சு’ன்னு...

2026-01-06 17:18:11
news-image

கடன் சுமை குறைவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-01-05 17:00:09
news-image

பித்ருக்களின் சாபத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-01-03 16:03:58
news-image

தங்கம் தங்குவதற்கான சில சூட்சம குறிப்புகள்..!?

2026-01-02 15:52:58
news-image

இந்த புத்தாண்டிற்கான பிரத்யேக வழிபாடு

2026-01-01 16:02:44
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான மந்திர வழிபாடு..!?

2025-12-31 17:22:30
news-image

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026

2025-12-30 18:27:23