(எம்.ஆர்.எம்.வசீம்)
மலையத்தில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு கம்பனி காரர்களும் பொறுப்புக்கூற வேண்டியுள்ள நிலையில் அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை கம்பனி காரர்களை உள்ளடக்கி குழுவுக்கு வழங்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த குழுவை உடனடியாக இரத்துச்செய்து, உத்தியோகபூர்வ கட்டமைப்பாென்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என முன்னிலை சோசலி முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
முன்னணி சோசலி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய அனர்த்தத்ததை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை கம்பனி காரர்களுக்கே அரசாங்கம் வழங்கி இருக்கிறது. இடம்பெற்றுள்ள இந்த அழிவுக்கு அவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டிய குழுவாகும். நாட்டின் மலைமேடுகள் இயற்கை சூழல் ஆறுகள் என அனைத்தையும் அழித்து, தங்களின் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கையாலே இன்று சிறிய மழைக்கும் வெள்ளம் ஏற்பட காரணமாகும். மலையக அப்பாவி மக்களை எந்த பாதுகாப்பும் இன்றி வைத்துக்கொண்டு, அவர்களிடம் வேலை எடுப்பது இந்த கம்பனி காரர்களாகும். அனர்த்த முகாமைத்துவத்துக்காக அமைக்கப்பட்ட நிதியத்தை அரசாங்கம் இவர்களுக்கே வழங்குகின்றது.
இந்த அனர்த்த முகாமைத்துவ குழு தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்குள்ளும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, இந்த குழு பணம் சேகரிப்பது மாத்திரமாகும் செலவிடுவதில்லை என தெரிவித்திருந்தார். என்றாலும் அது பொய்யாகும். ஏனெனில் அதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பில், நிதி சேகரிப்பதற்கு, செலவிடுதலுக்காக முன்னிலைகளை தயாரிக்க மற்றும் பணம் செலவிட குழுவுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதனால் இந்த குழு எதிர்காலத்தி்ல் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குகளுக்கு முன்னோடியாக இருக்கலாம் என்பதை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். சுனாமி நிவாரண குழு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தொடுத்த வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில், அரசாங்கம் அல்லாத தரப்பொன்று ஊடாக அரச நிதி செலவிட முடியாது என தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் தற்போதாவது இந்த குழுவை இரத்துச்செய்து, அனர்த்த முகாமைத்துவத்துக்கு ஏற்புடைய உத்தியோபூர்வ கட்டமைப்பொன்றை உடனடியாக அமைக்குமாறு நாங்ள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
அதேபோன்று அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் விடுக்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர் அறிக்கைகளும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே இருக்கின்றன. தமிழ் மொழியில் அறிக்கை விடுவிக்கப்படவில்லை. இந்த அனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் இருந்த பிரதேசங்களாகும். என்றாலும் அவர்களுக்கு தகவல் அறிந்துகொள்ள இருக்கும் உரிமையை அரசாங்கம் மீறி இருக்கிறது. அதனால் இந்த அனர்த்த நேரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எந்தளவு பலவீனமாக இருந்தது என்பது இந்த விடயங்களில் இருந்து தெளிவாகிறது. அதனால் தற்போதாவது இந்த பிரச்சினையை பாரதூரமாக எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்கிறோம்.
அதனால் அரசாங்கம் ஆரம்பமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் இருந்து ஒதுங்க வேண்டும். ஏனெனில் அந்த நிபந்தனைகள் இருக்கும் வரை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது. அடுத்ததாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களின் வரியை நீக்க வேண்டும். மலையக பிரதேசங்களில் மீள குடியமர்த்தும்போது விஞ்ஞான ரீதியிலான முறைமைக்கு அமைய நடவைக்கை எடுக்க வேண்டும்.
மேலும் 5ஆயிரம் அடிக்கு மேல் உயர்ந்த இடங்களில் இருக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அகற்றி, வேறு இடங்களில் அவர்களை குடியமர்த்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது நல்ல தீர்மானம். ஆனால் சுனாமி அனர்த்தத்தின்போது, கடற்கரைக்கு அண்மித்த மக்களை அகற்றி மேற்கொண்ட வேலையை இங்கும் செய்ய முற்படக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் கடற்கரை பிரதேசத்தில் இருந்த மக்களை அங்கிருந்து அகற்றியதை அடுத்து, ஹோட்டல் காரர்கள் அங்குசென்று அந்த இடங்களை கைப்பற்றிக்கொண்டனர்.
தற்போது கம்பனி காரர்களை இணைத்துக்கொண்டு குழு அமைத்துக்கொண்டிருப்பதால், அரசாங்கம் மலையக காணிகளை கம்பனி காரர்களுக்கு விற்பனை செய்ய முற்சிக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. அதனால் இந்த நாடக்ததை அவ்வாறே நடத்தாமல்,மலையக காணிகளை மீண்டும் வனங்களுக்காக விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் மலையக மக்கள் 200 வருடங்களாக வாழ்வதற்கு வீடொன்றை காணித்துண்டு உன்ஙறை கேட்கிறார்கள். இன்று அவர்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். தற்போதாவது அந்த மக்களுக்கு காணி, வீடொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM