அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் ; சம்பிக்க

09 Dec, 2025 | 08:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மிக மோசமான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள போவதாக வளிமண்டவியல் திணைக்களம் முன்கூட்டியதாக அறிவித்தும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமாக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவிரைவில் வழமைக்குத் திரும்பினால் தான் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்த முடியும்.

அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போது தான் திட்டங்களை சிறந்த முறையில் வகுக்க முடியும்.

இலங்கை மிக மோசமான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள போவதாக வளிமண்டவியல் திணைக்களம் முன்கூட்டியதாக அறிவித்தும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முறையாக ஆராய வேண்டும்.

வளிமண்டளவியல் திணைக்களம் இந்த அனர்த்தம் பற்றி முன்னெச்சரிக்கை விடுத்தததாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து இதனை விசாரணை செய்ய வேண்டும்.இந்த தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24