மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

09 Dec, 2025 | 08:24 PM
image

(செ.சுபதர்ஷனி)

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கப் பொறிமுறை, தனியார் துறை, வர்த்தக சமூகம், சர்வதேச உதவிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் அர்ப்பணிப்புடன் வீழ்ச்சியடைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கத் தேவையான அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருவதாக  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஆசீர்வாதம் வழங்குதல் மற்றும் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றியை  முன்னிட்டும் செவ்வாய்க்கிழமை  (09) காலை களுத்துறை போதி மற்றும் களுத்துறை சிலுவைப் பேராலயத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னர் வீழ்ச்சியடைந்த மக்கள் வாழ்க்கையை ஓரளவு மீட்க முடிந்துள்ளது. அரசாங்கப் பொறிமுறை, தனியார் துறை, வர்த்தக சமூகம், சர்வதேச உதவிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் அர்ப்பணிப்புடன் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கத் தேவையான அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

நமது நாடு அவ்வப்போது இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த சில நாட்களில் அந்த பேரழிவுகளிலிருந்து வேறுபட்ட பெரிய பேரழிவை நாம் எதிர் கொண்டிருந்தோம்.

இந்த அனர்த்தத்தில் சுமார் 600 க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும்,  இந்த நாட்டின்  பிரஜையாகவும்  உயிரிழந்த எம் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஸ்தம்பித்திருந்த மின்சார விநியோகத்தை சுமார் 98 சதவீதம் வரையும்,  தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோகத்தை குறிப்பிடத்தக்களவும்  மீட்டெடுக்க முடிந்துள்ளது. 

பேரிடரின் பின்னர் மீண்டெழும் நாட்டை,  முன்பிருந்ததை விட உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல இவ்வாறான மத வழிபாடுகளும் ஆசீர்வாதமும் அத்தியாவசியமானவை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கும், உயிரிழந்த மக்களின் ஆன்ம இளைப்பாற்றியை முன்னிட்டும் பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து அனைத்து மத ஆசீர்வாத நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அற்கமைய தேசிய மட்டத்திலான ஆசீர்வாத போதி பூஜை மற்றும் முதன்மையான மத நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் நடைபெற்றதுடன், அதற்கு இணையாக களுத்துறை மாவட்டத்தில் சர்வ மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அனைய மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வெட்டுமகட இஸ்லாம் பள்ளிவாசல் மற்றும் பாணந்துறை இந்து ஆலயம் ஆகிய இடங்களிலும் ஆசீர்வாத நிகழ்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விகாரைகள் மற்றும் ஏனைய மத ஸ்தலங்களிலும் ஆசீர்வாத நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07