பறங்கி, பாலி ஆறுகளின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை

09 Dec, 2025 | 05:35 PM
image

பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான  சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில்  வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருடாந்தம் 5 பில்லியன் டொலர் முதலீடுகளை...

2026-11-13 16:24:22
news-image

ஏழைகளை ஒதுக்கிவிட்டு பணக்காரர்களுக்கு இடமளிக்கும் வரவு...

2026-11-13 17:19:13
news-image

மலையக மக்களுக்கு இந்த வரவு செலவுத்...

2026-11-13 17:33:32
news-image

2027 வரவு செலவுத் திட்டத்திலும் வாகன...

2026-11-13 15:36:21
news-image

வரவு செலவுத் திட்டத்தில் எதிர்கால சந்ததியினருக்கு...

2026-11-13 15:35:31
news-image

சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில்...

2026-11-13 15:22:25
news-image

கல்வித் துறையின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: அரசாங்கத்தின்...

2026-11-13 16:08:12
news-image

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் புயலாக...

2026-11-13 21:50:38
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு

2026-11-13 21:38:19
news-image

விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் இல்லை -...

2026-11-13 17:20:07
news-image

மலையக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை...

2026-11-13 16:11:53
news-image

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள்...

2026-11-13 16:09:56