(செ.சுபதர்ஷனி)
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நிவாரணப் பணி மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்திவருவதில் அரசியல் தலையீட்டால் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் நிவாரணம் வழங்குதல், நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. எனினும் உரிய தரப்பினரிடம் நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை அரசியல் தலையீடுகளால் கிராம உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர்கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை. எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் என்றார்.
மேலும் சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்க செயலாளர் ஜகத் சந்திரலால் குறிப்பிடுகையில்,
பேரழிவு காலங்களில் அரசாங்கம் வேறு விடயங்களில் ஈடுபட வேண்டாம். "பிரஜா சக்தி" என்ற இந்த புதிய திட்டத்தை பேரழிவு நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டாம். பல மாவட்டங்களில், பிரஜா சக்தி அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கையொப்பமிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பதுளை மாவட்ட செயலாளரே கடிதம் அனுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட செயலாளர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏனைய பிரதேச செயலகங்களில் பிரஜா சக்தி அதிகாரிகளிடமிருந்தும், பிரஜா சக்தியின் அரசியல் அதிகாரிகளிடமிருந்தும் கையொப்பங்களைப் பெற வேண்டியுள்ளது. 25,000 ரூபா வழங்கும் விடயத்தை அரசியல் அதிகாரிகளிடம் சொல்லி பரிந்துரைகளைப் பெற முயன்றால், கிராம உத்தியோகத்தர் கடமைக்கு இடையூறு ஏற்படும். இதுவரை கிராம உத்தியோகத்தர் சுயமாகவே செயற்பட்டுள்ளனர் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM