காகில்ஸ் 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' செயற்திட்டம் கிராமிய தொழில்முனைவோரை வலுப்படுத்தி வருகின்றது

09 Dec, 2025 | 03:04 PM
image

காகில்ஸ், சமீபத்தில் தனது தலைமை அலுவலக வளாகத்தில் நான்காவது முறையாகவும் வெற்றிகரமாக தனது வருடாந்திர 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' பயிற்சி திட்டத்தை நடாத்தியிருந்தது. இந்த பயிற்சித்திட்டம்; 58 சிறு வணிக உரிமையாளர்களை ஒன்றிணைத்ததுடன் வட மாகாணத்திலிருந்தும் பல பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

காகில்ஸின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட இந்த அமர்வானது தரத்தினை உறுதி செய்தல், உணவு தொடர்பான விதிமுறைகள், பொதியிடல் மற்றும் லேபிளிங் உள்ளடங்கலான நவீன வர்த்தக நடைமுறைகளுக்கேற்ப உற்பத்திகளை பட்டியலிடுவதற்கான உத்திகள் பற்றிய அத்தியாவசியமான தலைப்புகளை உள்ளடக்கியிருந்தது.

இந்நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்கள் நிலைப்பேண்தகு வணிக நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொண்டதுடன், காகில்ஸ் வங்கியிடமிருந்து நிதியியல் மூலங்களை அணுகுவதற்கான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் அவர்களினது வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவும் நடைமுறை கருவிகளும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' செயற்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட வளர்ச்சிகளை ஈட்டிய தொழில் முனைவோர் தமது வெற்றிக் கதைகளைச் சகலருடனும் பகிர்ந்து கொண்டனர். தேசிய சமூகங்களுக்குச் சேவை வழங்குவதிலிருந்து ஏற்றுமதி சந்தைகளில் காற்தடம் பதித்தது வரையான தமது பயண அனுபவங்களை எடுத்துக்காட்டி, பங்கேற்றிருந்த சக சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிக உரிமையாளர்களுக்கு உத்வேகமும் நடைமுறைச் சாத்தியமான நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்த அமர்வு விலைமதிப்பற்ற நிபுணத்துவத்தை வழங்கியது மட்டுமல்லாமல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிக உரிமையாளர்களுக்கும் முக்கிய பங்குதாரர்களுக்கும் இடையிலான பொருள் பொதிந்த தொடர்புகளை வளப்படுத்தியது. இது காகில்ஸ் பிரதிநிதிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடனான நேரடித் தொடர்பை பங்கேற்பாளர்களுக்குச் சாத்தியமாக்கியது.

2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' திட்டமானது கொவிட்-19 தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மற்றும் சந்தைகளை அணுகுவதில் சவால்களை எதிர்கொண்ட சிறிய அளவிலான தேசிய வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்ற இந்த நிகழ்ச்சி திட்டமானது பெண் தொழில் முனைவோர், இளைஞர் தலைமையிலான வணிகக்குழுக்கள் மற்றும் விசேட திறன்களைக் கொண்ட தனிநபர்கள் உட்பட பல்வேறு தொழில் முனைவோரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இம்முயற்சியின் ஊடாக தேசிய தொழில் முனைவோரை வலுப்படுத்துவதற்கு காகில்ஸ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய...

2026-01-12 13:59:19
news-image

நிர்க்கதிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு...

2026-01-08 19:04:29
news-image

HelaGo அறிமுகம்: இலங்கையில் புதிய நியாயமான...

2026-01-07 15:57:51
news-image

2024 - 25க்கான Business Today’s...

2026-01-06 19:06:17
news-image

2025 "CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...

2026-01-06 15:34:16
news-image

இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன்...

2026-01-06 15:23:21
news-image

HelaGo அறிமுகம் : இலங்கையில் புதிய...

2026-01-05 18:47:55
news-image

வட மாகாணத்தின் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு...

2026-01-05 16:47:51
news-image

இலங்கையின் முதல் ATM வணிகம், தொழில்நுட்ப...

2026-01-02 15:34:14
news-image

தேசிய லொட்டர் சபையால் 1,265 மில்லியன்...

2026-01-01 15:54:35
news-image

கார்கில்ஸ் வங்கி தெஹிவளை கடற்கரையை சுத்தம்...

2026-01-01 15:51:49
news-image

எல்ஜீ அபான்ஸ் குறியீடு தூதுவரானார் பெத்தும்...

2026-01-01 14:33:04