இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு

09 Dec, 2025 | 11:23 AM
image

இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன்  5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. 

அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில்...

2026-01-13 15:36:39
news-image

பாப்பரசர் லியோவை சந்தித்தார் வெனிசுவெலா எதிர்க்கட்சித்...

2026-01-13 14:43:17
news-image

டெல்லியில் வளி மாசு அதிகரிப்பு ;...

2026-01-13 12:14:31
news-image

ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச...

2026-01-13 11:18:56
news-image

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது...

2026-01-13 11:38:59
news-image

அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்:...

2026-01-13 11:36:24
news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50