அனாபிலாக்ஸிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

08 Dec, 2025 | 05:14 PM
image

எம்மில் சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதோ அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதோ அல்லது வேர்கடலை உள்ளிட்ட உணவுகளை பசியாறும் போதோ திடீரென்று ஒவ்வாமைக்கான எதிர்வினையை மேற்கொள்வார்கள். சிலருக்கு திடீரென்று ஏற்படும் இத்தகைய ஒவ்வாமைக்குரிய எதிர்வினை- சில நிமிடங்கள் வரை நீடித்து, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இதனை மருத்துவ மொழியில் அனாபிலாக்ஸிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது உடனடியான நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அனாபிலாக்ஸிஸ் என்பது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் இயல்பான அளவை விட அதிக அளவில் ஒவ்வாமையை எதிர்கொள்வதற்கான ரசாயனங்களை சுரப்பதால்.... சில தருணங்களில் அதிர்ச்சியில் ஆழ்த்தி, ரத்த அழுத்தத்தை திடீரென குறைக்கிறது. சிலருக்கு இதன் காரணமாக அவர்களின் சுவாச பாதையில் பாரிய தடை ஏற்பட்டு, சுவாசத் திணறலை ஏற்படுத்தும். நாடித்துடிப்பிலும் சமச்சீரற்ற தன்மை உண்டாகும். சிலருக்கு குமட்டல், வாந்தி போன்ற அறிகுறியும் ஏற்படும். இவை பெரும்பாலும் சில உணவுகள்- சில மருந்து, மாத்திரைகளின் பக்க விளைவுகள்- சில விடம் கலந்த பூச்சிக்கடி -ஆகியவற்றின் காரணங்களால் ஏற்படக்கூடும்.

தோல் அரிப்பு, தோலில் மாற்றம், குறைந்த குருதி அழுத்தம், சுவாசத் திணறல், இதயத்துடிப்பு இயல்பை விட குறைவாக துடிப்பது, குமட்டல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... நீங்கள் அனாபிலாக்ஸிஸ் எனும் ஒவ்வாமைக்கான தீவிர எதிர்வினையால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.

இத்தகைய தருணங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நிவாரண சிகிச்சையை பெற வேண்டியதிருக்கும்.

வேர்க்கடலை, மீன் போன்ற சில உணவுப் பொருட்கள்- வலி நிவாரணி உள்ளிட்ட சில மருந்து, மாத்திரைகளின் பாவனைகளால் ஏற்படும் பக்க விளைவு, தேனீக்கள், கட்டெறும்பு உள்ளிட்ட பூச்சிக்கடி... என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு சில இடங்களில் மேற்கொள்ளும் நடைபயிற்சி- உடற்பயிற்சி -மெல்லோட்டம் -காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகக்கூடும்.

இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால்.. உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் . இவர்களுக்கு வைத்தியர்கள் உடனடியாக பசியாறிய உணவு குறித்த விடயங்களையும் , பாவித்த வலி நிவாரணி உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் குறித்த விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டு , சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை உடனடி சிகிச்சையாக அளித்து நிவாரணம் வழங்குவார்கள். பிறகு ஒவ்வாமைக்கான காரணிகளை கண்டறிந்து அதனை வாழ்நாள் முழுவதும் தவிர்க்கும் படி பரிந்துரை செய்வார்கள்.

வைத்தியர் சாய் பாலாஜி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திரவ வடிவிலான திசு பரிசோதனை யாருக்கு,...

2026-01-12 15:19:54
news-image

உள்நோக்கி வளரும் கால் நக பாதிப்பிற்கான...

2026-01-10 17:54:40
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-01-09 17:15:47
news-image

கருத்தரித்த பெண்களுக்கு டபுள்மார்க்கர் பரிசோதனை அவசியமா..?

2026-01-08 15:08:20
news-image

தொடர் இரத்த சர்க்கரை அளவை அவதானிக்கும்...

2026-01-07 16:48:36
news-image

பைலோனெஃப்ரிடிஸ் எனும் சிறுநீரக தொற்று பாதிப்பிற்குரிய...

2026-01-06 17:26:14
news-image

ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பிற்கான...

2026-01-05 17:03:48
news-image

மூளையில் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-01-03 16:06:53
news-image

சிறார்களுக்கு ஏற்படும் குருதி தொடர்பான பாதிப்பிற்குரிய...

2026-01-02 16:17:48
news-image

ஈசினோஃபிலீக் கிரானுலோமடோசிஸ் வித் பொலி ஒஞ்சியைடீஸ்...

2026-01-01 16:26:27
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பை அவதானிப்பது...

2025-12-31 17:15:49
news-image

ரீகர்ஜிடேசன் எனும் இதயத்தில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-12-30 17:57:43