கண்ணகி நகர்- திரைப்பட விமர்சனம்

08 Dec, 2025 | 04:54 PM
image

கண்ணகி நகர்- திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ராஜீவ் மேனன் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : தீனா, கௌதம், தீபா உமாபதி, முத்துராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : குணா

கபடி விளையாட்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் பரிசாலும், பாராட்டாலும் பிரபலமான கண்ணகி நகர் கார்த்திகாவை தொடர்ந்து.. புதுமுகங்களின் நடிப்பில் தயாரான 'கண்ணகி நகர்' எனும் பெயரில் தமிழ் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்வித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.‌

ஆழிபேரலையால் உறவுகளை முற்றாக இழந்த குட்டி ( கௌதம்) மற்றும் மீனா ( தீபா உமாபதி) ஆகியோர் கண்ணகி நகரில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் மீனா காணாமல் போகிறார். குட்டி அவரைத் தேடத்தொடங்குகிறார்.  அவருடைய தேடலில் மீனாவை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து விட்டதாக அறிகிறார். அதனைத் தொடர்ந்து குட்டி என்ன செய்தார் ? என்பதை பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கௌதமன் வடசென்னை வாழ் இளைஞர்களின் உடல் மொழியையும், உச்சரிப்பையும், நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் தீபா உமாபதி வழக்கமான வேடமாக இருந்தாலும்.. அதில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறார்.

வழக்கமான கதையாக இருந்தாலும் உறவுகளை தொலைத்த பின் ஒருவனது இறுதி முடிவு என்னவாக இருக்கும்? என்பதை இயக்குநர் விவரித்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

பா.மு முஹம்மது ஃபர்ஹானின் ஒளிப்பதிவும் , 'தேனிசை தென்றல்' தேவாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.

கண்ணகி நகர்- ஓ டி பி ( One Time Parkalaam)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33