நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

08 Dec, 2025 | 03:58 PM
image

எம்மில் பலரும் உயர்கல்வி கற்று அதில் ஏதேனும் புதுமையான விடயங்களை துல்லியமாக அவதானித்து கண்டறிந்தாலும் அல்லது தொழிலில் ஈடுபட்டு அதனூடாக புதிய விடயங்களை கண்டறிந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதில் பல தடைகளும், குறுக்கீடுகளும், இடையூறுகளும் ஏற்பட்டு, வெற்றியை தாமதப்படுத்தும். இதுபோன்ற தருணங்களில் உங்களின் எண்ணம் ஈடேற சூட்சமமான முறையில் சிவ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : வில்வ இலை - பசும்பால் - வில்வ மர காய்.

வியாழக்கிழமைகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் முறையாக சிவ மந்திரத்தை உச்சரித்து அருகில் உள்ள வில்வ மரத்திலிருந்து வில்வ இலையையும், வில்வ காயையும் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமையில் காலையில் சிவபெருமானுக்கு பசும்பால் மற்றும் வில்வ இலையை அபிஷேகத்திற்கு வழங்கிட வேண்டும். அதற்கு முன்னதாக பசும்பாலில் சிறிதளவு வில்வ இலை மற்றும் பன்னீரை  சேர்த்து, அந்த நீரில் நாம் நீராட வேண்டும். அதன் பிறகு ஆலயத்திற்கு சென்று வில்வ மர காயில் இருந்து அதன் உள் பகுதியை முற்றாக நீக்கிவிட்டு, அதில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

இப்போது நீங்கள் உங்களுடைய பிரார்த்தனையை சிவபெருமானிடம் சமர்ப்பித்தால்.. உங்கள் பிரார்த்தனை எந்தவித தடையும் இன்றி விரைவாக நிறைவேறும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினையை குறைத்து கொள்வதற்கான எளிய...

2026-09-15 14:48:01
news-image

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உப ரத்தின கல்

2026-09-14 15:44:29
news-image

பண தட்டுப்பாடு இன்றி நீடித்திருக்க!

2026-09-12 15:08:31
news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27