நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும் புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

08 Dec, 2025 | 03:08 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

கிரகரி வாவியின் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் பொறுப்பை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

சீரற்ற காலநிலையினால் கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பாக நாட்டில்  பரவலாகப் பேசப்படும் கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கடந்த 27 ஆம் திகதி வரலாற்றில் மிக அதிக அளவு நீர் கிடைத்ததாகவும், கொத்மலை அணையைப் பாதுகாக்கும் நோக்கில்  வழமையான  முறைப்படி அறிவியல் பூர்வமாக வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நுவரெலியா மாவட்டத்தில் 4700 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 500 ஏக்கர் வயல் நிலங்கள் தவிர, ஏனைய நெல் வயல் நிலங்களில் பெரும்போகத்தில் பயிற்செய்கை மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள் குறித்து இதன்போது ஜனாதிபதி ஆராய்ந்தார். சட்டவிரோதக் கட்டிடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் இங்கு  சுட்டிக்காட்டினர்.

இதற்குத் தீர்வாக, கிரகரி வாவியின்  கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை  நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ஒப்படைக்கவும்  பொருளாதார செயற்பாடுகளை நகர சபையின் கீழ்  மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18