கேகாலை பொலிஸ் அதி­கார பிர­தே­சத்­திற்­குட்­பட்ட  பகு­தியில்  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  காலை 10 மணி முதல் இரவு 10 மணி­வ­ரையில் மேற்­கொள்­ளப்­பட்ட பொலிஸ் சுற்­றி­வ­ளைப்பின் போது 114 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் 37ஆயிரம் ரூபா வரையில் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும்  கேகாலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதி­காரி பிரனீத் மான­வடு தெரி­வித்தார்.

வீதி விதி­மு­றை­களை மீறிய மோட்டார் வாகன ஓட்­டு­னர்கள் 54 பேர், பல்­வேறு முறைப்­பா­டுகள் தொடர்பில் தொடர்பு­டைய சந்­தேக நபர்கள் 24 பேர் சூது விளை­யாட்டில் ஈடுபட்ட 12 பேர் சட்­ட­வி­ரோத கசிப்பு உற்­பத்தி செய்து வைத்­தி­ருந்த 14 பேர், பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 7 பேர் குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட சந்­தேக நபர்கள் 2 பேர், போதைப் பொருள்­வைத்­தி­ருந்த சந்­தேக நப­ரொ­ருவர் என 114 பேர்  வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.