வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்

08 Dec, 2025 | 02:59 PM
image

கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற  நூற்றுக்கணக்கான மாணவர்களில்  மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள்  நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நைஜர் மாநிலத்தின் அகவாரா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலையில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (21) அததுமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களை  கடத்தி சென்றனர்.  

இதில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட  ஆண் மற்றும் பெண் மாணவர்கள் அடங்குவதாக அந்நாட்டு கிறிஸ்துவ சங்கம் தெரிவித்தது. கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பி சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். 

மேலும் 153 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10