டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகம் !

08 Dec, 2025 | 01:21 PM
image

இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை - டெல்வின் (பி) பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 23ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ ஆ. மகேந்திர குருக்கள் தலைமையில், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆச்சாரியர்களின் பங்கேற்புடன் கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.

குறித்த ஆலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி பூஜைகள் ஆரம்பமாகி, 22ஆம் திகதி எண்ணெய் காப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து 23ஆம் திகதி விசேட கும்பாபிஷேக பூஜைகள் மகத்தான ஆன்மீக சூழலில் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டன.

அத்தோடு, 24 ஆம் திகதியிலிருந்து 48 நாட்கள் விசேட மண்டலாபிஷேக பூஜைகள் இடம்பெறுவதுடன் 2026.01.10 ம் திகதியன்று அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மக்கள், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக குடியேறிய போது, அரச மரத்தின் கீழ் ஒரு சிறிய கோவிலை அமைத்திருந்தனர்.

அந்தத் தெய்வ ஆலயத்தை மையமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டு ஊர் மக்கள் ஒன்றிணைந்து, முதன்முறையாக ஆகம முறைப்படி முதல் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை கடந்து, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வருடம் மீண்டும் கும்பாபிஷேகம்  நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, ஆலய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், மக்கள் மத்தியில் பெரும் ஆன்மீக உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலயத்தின் மகத்தான கும்பாபிஷேகத்தின் உண்மையான கதாநாயகனாக கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ ஆ. மகேந்திர குருக்கள் திகழ்கிறார்.

இங்கு நடைபெற்ற யாகங்கள், வேள்வி மந்திரங்கள் மற்றும் ஆகம கிரியைகள் அனைத்தும் ஒழுங்கமைந்த, புனிதமான முறையில் நிறைவேற்றப்படுவதற்கு முக்கிய காரணியாக அவர் செயல்பட்டுள்ளார்.

கும்பாபிஷேகத்தில் இடம்பெற வேண்டிய அனைத்து ஆகமச் செயல்முறைகளையும் சிறப்பு வாய்ந்த ஆச்சாரியர்களைத் தேர்வு செய்து, திட்டமிட்டு, நேர்த்தியாக வழிநடத்தி, சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த பெருமை முழுமையாக அவரைச் சாரும்.

அவரது அர்ப்பணிப்பும் ஆன்மீகத் தொண்டும் இந்த ஆலய வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஒரு தெய்வீக சேவையாக விளங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50