இங்கிலாந்தின் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் முடிவுகட்டினார் நேசர்; ஆஷஸ் தொடரில் 2 - 0 என ஆஸி. முன்னிலை

Published By: Vishnu

07 Dec, 2025 | 08:36 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இங்கிலாந்தின் கடும் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் மைக்கல் நேசர் முடிவுகட்ட, 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா அந்த இரண்டு டெஸ்ட்களையும் மொத்தமாக ஆறு நாட்களுக்குள் நிறைவுசெய்து வெற்றியீட்டியது.

முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்ததுடன் அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு அற்புதமாக இருந்தது.

அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டிருந்தது. இதுவும் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 37 ஓவர்கள் தாக்குப் பிடித்து 7ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர்.

ஆனால், அவர்கள் இருவரையும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மைக்கல் நேசர் ஆட்டம் இழக்கச் செய்ய இங்கிலாந்தின் தோல்வி நெருங்கியது.

பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மைக்கல் நெசர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு 65 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ட்ரவிஸ் ஹெட் 22 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 23 ஓட்டங்களுடனும், ஜேக் வெதரோல்ட் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 334 (ஜோ ரூட் 138, ஸக் குரோவ்லி 76, ஜொவ் ஆச்சர் 38, ஹெரி ப்றூக் 31, மிச்செல் ஸ்டாக் 75 - 6 விக்.)

அவுஸ்திரேலியா 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 511 (மிச்செல் ஸ்டாக் 77, ஜேக் வெதரோல்ட் 72, மானுஸ் லபுஸ்ஷேன் 65, அலெக்ஸ் கேரி 63, ஸ்டீவ் ஸ்மித் 61, கெமரன் க்றீன் 45, ப்றைடன் கார்ஸ் 152 - 4 விக்., பென் ஸ்டோக்ஸ் 113 - 3 விக்.)

இங்கிலாந்து 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 241 (பென் ஸ்டோக்ஸ் 50, ஸக் க்ரோவ்லி 44, வில் ஜெக்ஸ் 41, ஒல்லி போப் 26, மைக்கல் நேசர் 42 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 47 - விக்., மிச்செல் ஸ்டாக் 64 - 2 விக்.)

அவுஸ்திரேலியா - வெற்றி இலக்கு 65 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 69 - 2 விக். (ஸ்டீவன் ஸ்மித் 23 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 22, ஜேக் வெதரோல்ட் 17 ஆ.இ., கஸ் அட்கின்சன் 37 - 2 விக்.)

ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58
news-image

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை...

2026-04-10 17:20:37
news-image

39 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போட்டியில் கண்டியை...

2026-04-10 16:54:40
news-image

ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் பிரகாசித்த...

2026-04-10 16:49:45
news-image

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட தம்புள்ளை-கொழும்பு...

2026-04-10 16:02:34
news-image

சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9...

2026-04-10 13:21:07
news-image

முகுல் சௌதரியின் ஆட்டம் இழக்காத அரைச்...

2026-04-10 04:54:36
news-image

காருண்ய பணிக்காக ஏலம் விட்ட ஒலிம்பிக்...

2026-04-10 04:50:20
news-image

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ;...

2026-04-09 17:05:46