(எம்.மனோசித்ரா)
உண்பதற்கு பொறுத்தமற்ற, வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு வெளியிடும் மோசடியை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பகுதியில் இவ்வாறு வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை விற்பனை செய்த சந்தேகநபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத சுமார் 1,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலெஸ்ஸா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தொடர்பில் நாடு முழுவதும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைகளில் ஈடுபட வேண்டாம் என்று வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்த நேரத்தில் அரிசி வாங்கும் போது விழிப்புடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தங்கள் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறில்லை எனில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர அவசர அழைப்பு எண் 1926 ஐ தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM