(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கான அலுவலக புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளன. எனவே இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் நலன் கருதி, விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கண்டியிலிருந்து கொழும்புக்கும், குருநாகலிலிருந்து கொழும்புக்கும் வேலைக்குச் செல்லும் புகையிரதத்துக்கான மாதாந்த பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் (Season Ticket Holders) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அவற்றைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு நாளை திங்கட்கிழமை (8) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கமைய காலை 5:30, 5:45 மற்றும் காலை 6:00 மணிக்கு ரம்புக்கணையிலிருந்து இந்த பஸ்கள் புறப்படும். இந்த பஸ்கள் முறையே இரவு 7:45, இரவு 8:15 மற்றும் இரவு 9:00 மணிக்கு ரம்புக்கணையை சென்றடையும்.
இதேவேளை அதிகாலை 4 மணி, 4.15 மற்றும் 4.30 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்புக்கான பஸ் சேவைகள் இடம்பெறும். மேலும் காலை 5 மணி, 5.15 மற்றும் 5.30க்கு குருணாகலிலிருந்து கொழும்புக்கு பஸ் சேவைகள் இடம்பெறும்.
மாலை வேளைகளில் 4.45 மணி, 5.15 மற்றும் 6 மணிக்கு கொழும்பிலிருந்து கண்டிக்கான பஸ் சேவைகள் இயக்கப்படும். இதேவேளை மாலை 4.45, 5.30 மற்றும் 6.15 மணிக்கு கொழும்பிலிருந்து குருணாகலுக்கான பஸ் சேவைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM