கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருளுடன் தம்பதி கைது!

07 Dec, 2025 | 05:36 PM
image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட "குஷ்" போதைப்பொருட்களுடன் இரண்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது இன்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெற்கு களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 30 வயதுடைய, திருமணமான தம்பதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனத்துக்கு சொந்தமான UL-102 விமானத்தின் மூலம் மாலைத்தீவின் மாலேவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதன்போது சுமார் 25 கோடியே 89 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா மதிப்புடைய, 21 கிலோகிராம் 582 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கொண்ட 24 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருள் கையிருப்பு, தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளால் முன்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (8) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2026-04-13 12:02:43
news-image

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை...

2026-04-13 11:25:16
news-image

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு: 817...

2026-04-13 11:14:06
news-image

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால...

2026-04-13 10:56:57
news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53