விற்பனைக்காக கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர் என சந்தேகிக்கப்பட்ட நபரை இன்று கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்த போதே குறித்த நபரிடமிருந்து 15 பக்கட்டுக்கள் கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நாளை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் என கலால் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.