நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (7) பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையின்படி,
திங்கட்கிழமை (8) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிக பலத்த காற்றோட்டம் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலைமை
பொத்துவில் பகுதியிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டைச் சூழ்ந்துள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
காற்று
நாட்டைச் சூழ்ந்துள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20–30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
கடல் நிலை
சிலாபத்திலிருந்து புத்தளம் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண மற்றும் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM