வட்டவளை, ஆக்ர ஓயா வீதியில் இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பிரதேசத்தில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இவ்விபத்தானது இன்று பி.ப. 2 மணியளவில் இடம் பெற்றதோடு தடைபட்டிருந்த போக்குவரத்தை வட்டவளை போக்குவரத்து  பொலிஸார் சீர் செய்தனர்.

வட்டவளையிலிருந்து ஆக்ர ஓயா நோக்கி  சென்ற வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் லொனெக் தோட்டத்திற்கு சொந்தமான லொறியும் ஆக்ர ஓயாவிலிருந்து வட்டவளை நோக்கி பயணித்த கருங்கற்களை ஏற்றிச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் இரு வாகனங்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் தொடர்ந்தும் விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்