இன்றைய வானிலை

07 Dec, 2025 | 06:22 AM
image

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம்  திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54