பீபா உலகக் கிண்ணம் 2026 - அணிகள் பங்குபற்றும் குழுக்கள்

06 Dec, 2025 | 11:13 PM
image

(நெவில் அன்தனி)

வொஷிங்டன் டிசி கென்னடி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ணம் 2026க்கான பகிரங்க குலுக்கலின்போது பங்குபற்றவுள்ள அணிகள் எந்தெந்த குழுக்களில் இடம்பெறும் என்பது தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், பிரதமர் மார்க் கார்னி ஆகிய மூவரும் பீபா உலகக் கிண்ணம் 2026ஐ முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில் பகிரங்க குலுக்கலின்போது பிரசன்னமாகி இருந்தனர்.

பகிரங்க குலுக்கலின் பிரகாரம் பிறேஸில் - மொரோக்கோ, நெதர்லாந்து - ஜப்பான் ஆகிய போட்டிகளும் 2002 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பிரான்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்திய செனகல் ஆகிய அணிகளுக்கு இடையிலான மீள் போட்டியும் பீபா உலகக் கிண்ணம் 2026இல் அமையவுள்ள முக்கிய போட்டிகளில் சிலவாகும்.

2010 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மோதிய மெக்சிக்கோ - தென் ஆபிரிக்கா ஆகிய அதே அணிகள் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணம் 2026 ஆரம்பப் போட்டியிலும் மோதவுள்ளன. 

இதேவேளை, ஸ்பெய்ன், ஜேர்மனி, ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல் ஆகிய பலம்வாய்ந்த அணிகளை முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள முறையே கபோ வேர்டே, கியூரக்காஓ. ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்த்தாடவுள்ளன.

அணிகளுக்கான குழுநிலைப் படுத்தல் நேற்று நடைபெற்றதுடன் இன்றைய தினம் போட்டி அட்டவணைகளை பீபா வெளியிடவுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு வரவேற்பு நாடுகளான மெக்சிகோ ஏ குழுவிலும் கனடா பி குழுவிலும் ஐக்கிய அமெரிக்கா டி குழுவிலும் முதல் அணிகளாக நிரல்படுத்தப்பட்டன.

ஏனயை  அணிகள்  முதலாவது ஜாடி, இரண்டாவது ஜாடி, மூன்றாவது ஜாடி, நான்காவது ஜாடி என நான்கு ஜாடிகளிலிருந்து குலுக்கல் மூலம் எடுக்கப்பட்டன.

அணிகள்  இடம்பெறும்  குழுக்கள் 

ஏ குழு: மெக்சிகோ, தென் அமெரிக்கா, தென் கொரியா, செச்சியா/டென்மார்க்/வட மெசிடோனியா/அயர்லாந்து

பி குழு: கனடா, பொஸ்னியா மற்றும் ஹேர்ஸ்கோவினா/ இந்தாலி/வட அயர்லாந்து/வேல்ஸ், கத்தார், சுவிட்சர்லாந்து

சி குழு: பிறேஸில், மொரோக்கோ, ஹெய்ட்டி, ஸ்கொட்லாந்து

டி குழு: ஐக்கிய அமெரிக்கா, பரகுவே, அவுஸ்திரேலியா, கொசோவோ/ருமேனியா/ஸ்லோவாக்கியா/துருக்கி

ஈ குழு: ஜேர்மனி, கியூரக்காஓ, கோட்டே டி'ஐவொயர், ஈக்வடோர்

எவ் குழு: நெதர்லாந்து, ஜப்பான், அல்பேனியா/போலந்து/சுவீடன்/யூக்ரெய்ன், டியூனிசியா

ஜீ குழு: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

எச் குழு: ஸ்பெய்ன், கபோ வேர்டே, சவூதி அரேபியா, உருகுவே

ஐ குழு: பிரான்ஸ், செனகல், பொலிவியா/ஈராக்/சூரினாம், நோர்வே

ஜே குழு: ஆர்ஜன்டீனா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்தான்

கே குழு: போர்த்துக்கல், கொங்கோ/ஜெமெய்க்கா/நியூ கலடோனியா, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

எல் குழு: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

இதற்கு அமைய உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட இதுவரை தகுதிபெற்றுள்ள 42 அணிகள் குழுநிலைப் படுத்தப்பட்டுள்ளன.

ஆறு இடங்களுக்கான ப்ளெ ஒவ்  போட்டிகள்

எஞ்சிய 6 இடங்களை நிரப்பப்போகும் அணிகள் எவை என்பது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கடைசி ப்ளே ஒவ் போட்டி முடிவுகளின் பின்னர் உறுதிப்படுத்தப்படும்.

ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க ப்ளே ஓவ் போட்டிகளில் அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹேர்ஸ்கோவினா, செச்சியா,டென்மார்க், இத்தாலி, கொசோவோ, வட அயர்லாந்து, வட மெசிடோனியா, போலந்து, அயர்லாந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுவீடன், துருக்கி, யூக்ரெய்ன், வேல்ஸ் ஆகிய 16 அணிகள் விளையாடவுள்ளன. அவற்றில் நான்கு அணிகளே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

photo fifa world cup 2026 fifa playoffs

இதனைவிட பீபா உலகக் கிண்ண 2026 ப்ளே ஓவ் போட்டிகளில் பொலிவியா, கொங்கோ, ஈராக், ஜெமெய்க்கா, நியூ கலடோனியா, சூரினாம் ஆகிய 6 அணிகள் விளையாடவுள்ளன. அவற்றில் இரண்டு அணிகளே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

போட்டி முறை

இந்த 12 குழுக்களிலும் இடம்பெறும் அணிகள் முதலாவது சுற்றில் லீக் அடிப்படையில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 72 போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 24 அணிகளும் ஒட்டுமொத்தத்தில் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெறும் 8 அணிகளுமாக 32 அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாடும்.

அதனைத் தொடர்ந்து முன்னோடி கால் இறுதிகள், கால் இறுதிகள், அரை இறுதிகள், 3ஆம் இடத்துக்கான போட்டி, இறுதிப் போட்டி என்பன நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ்...

2026-01-12 21:34:35
news-image

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள்...

2026-01-12 19:24:41
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில்...

2026-01-12 02:33:11
news-image

ஷானக்க, ஹசரங்க அபார ஆற்றல் வெளிப்பாடு,...

2026-01-12 02:29:14
news-image

12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ரி20 போட்டியில்...

2026-01-11 22:53:54
news-image

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்

2026-01-11 21:22:56
news-image

நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு...

2026-01-11 20:20:44
news-image

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை -...

2026-01-11 19:34:09
news-image

நியூ ஸ்டார்ஸ் - சோண்டர்ஸ் அணிகள்...

2026-01-09 14:13:59
news-image

பாகிஸ்தானுடனான சர்வதேச ரி20 தொடரை இலங்கை...

2026-01-09 14:06:26
news-image

சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை...

2026-01-08 23:26:58
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்திய அணியின்...

2026-01-08 16:39:15